ரொனால்டோவின் அசால்ட்டான கோல்..அல் நஸர் மிரட்டல் வெற்றி
சவூதி புரோ லீக் தொடரில் அல் படெஹ் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் அல் நஸர் வீழ்த்தியது.
AI-Awwal மைதானத்தில் நடந்த இப்போட்டிஆரம்பமே பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் அல் நஸர் வீரர் தலிஸ்கா அடித்த ஷாட் நூலிழையில் கோலில் இருந்து மிஸ் ஆனது.
@AlNassrFC_EN
ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களில், சுல்தான் பாஸ் செய்த பந்தை ஜாம்பவான் ரொனால்டோ நேர்த்தியாக வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
இதற்கு பதிலடியாக 29வது நிமிடத்தில், அல் படெஹ் அணி வீரர் சலீம் அல்-நஜ்டி அடித்த ஷாட் அல் நஸர் கோல் கீப்பரின் கையில் பட்டும் கோல் ஆனது.
@AlNassrFC_EN
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது. அதன் பின்னரான இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினர்.
72வது சுல்தான் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி ஒடவியோ (Otavio) கோல் அடித்தார். அல் படெஹ் அணியால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை.
ஆனாலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் ரொனால்டோ அடித்த ஷாட்டை அபாரமாக செயல்பட்டு அல் படெஹ் வீரர்கள் தடுத்தனர்.
இறுதியில் அல் நஸர் அணி 2-0 என்ற கணக்கில் அல் படெஹ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் சவூதி புரோ லீக் புள்ளிப்பட்டியில் 16 வெற்றிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது.
@AlNassrFC_EN
இந்த வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, 'மற்றுமொரு வெற்றி, மற்றுமொரு கோல்..அல் நஸர் தொடர்ந்து பயணிக்கிறது!' என குறிப்பிட்டுள்ளார்.
@AlNassrFC_EN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |