மொத்தம் 6 கோல்கள், தங்க காலணி விருது: இறுதிப் போட்டியில் மாஸ் காட்டிய ரொனால்டோ
அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அல் ஹிலால் அணியை வீழ்த்தி அல் நஸர் அணி கோப்பை தட்டிச் சென்றுள்ள நிலையில், தங்க காலணி விருதையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கைப்பற்றியுள்ளார்.
கோப்பையை கைப்பற்றிய அல் நஸர்
அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதி சமநிலையில் நிறைவடைந்து இருந்தாலும், இரண்டாம் பாதியில் போட்டி அனல் பறந்தது.
Cristiano Ronaldo vs Al Hilal | Highlights.
— CristianoXtra (@CristianoXtra_) August 12, 2023
GOAT SHOW ??
pic.twitter.com/qUZcbXOQcG
அல் ஹிலால் அணியின் மைக்கேல் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து சுவாரஸ்யத்தை கூட்டினார்.
ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக அல் நஸர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரொனால்டோ ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து போட்டியை சமநிலைப் படுத்தினார்.
ஆட்டத்தின் 90 நிமிட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரமாக 30 நிமிடம் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது.
Cristiano Ronaldo All Two Goals vs Al-Hilal#CristianoRonaldo #GOAT? #AlNassrAlhilal pic.twitter.com/d9DtdVF7TP
— CR7 BASE (@cr7base) August 12, 2023
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ரொனால்டோ ஆட்டத்தின் 98வது நிமிடத்தில், தனது தலையை கொண்டு லாபகமான கோல் ஒன்றை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதனால் ஆட்டத்தின் இறுதியில் அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணியை வீழ்த்தி, அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.
Champions of Arab ? pic.twitter.com/Vvo67xICtX
— AlNassr FC (@AlNassrFC_EN) August 12, 2023
தங்க காலணி விருது
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பம்பரமாக சுழன்று கொண்டு வந்த அல் நஸர் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அற்புதமாக அடித்தார்.
அதிலும் ஆட்டத்தின் 98வது நிமிடத்தில் தலையை கொண்டு அடித்த லாபகமான கோல் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Cristiano Ronaldo receiving the golden boot for carrying a team at the age of 38.
— Guinness World Records (@KushagraPSG) August 12, 2023
He really is timeless ? pic.twitter.com/oa9EgFuwsN
ரொனால்டோவின் இந்த அற்புதமான இரண்டு கோல்களின் மூலம் அல் நஸர் அணி அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த தொடரில் 6 கோல்களை அடித்து தொடரின் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
அத்துடன் தங்க காலணி விருதையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |