ரொனால்டோவிற்கு ரூ.28 கோடி மதிப்புள்ள கைக் கடிகாரத்தை பரிசளித்த அல்-நஸ்ர்!
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அல்-நஸ்ர் (Al Nassr) அணி ரூ.28 கோடி மதிப்புள்ள ஆடம்பர கைக் கடிகாரத்தை பரிசளித்துள்ளது.
ரூ.28 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம்
போர்ச்சுகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), சுத்தி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்ததைக் கொண்டாடும் வகையில் அவருக்கு இலங்கை பணமதிப்பில் ரூ.28 கோடி ($780,000) மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் 388 Tsavorite ரத்தினக் கற்கள் மற்றும் 18 கேரட் வெள்ளைத் தங்கத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
khaleejtimes
பச்சை நிறம்
கடிகாரத்தின் டயல் மட்டுமின்றி, அதன் பட்டையும் பச்சை நிறத்தில் முத்தையன் தோலால் செய்யப்பட்டது. இந்த அடர் பச்சை நிறம் சவுதி அரேபியாவைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜேக்கப் அண்ட் கோ (Jacob & Co) மூலம் பரிசாக வழங்கப்பட்ட இந்த கடிகாரம், ஆடுகளத்திலும் தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ரொனால்டோ நம்புவதாக கூறப்படுகிறது.
khaleejtimes
அல்-நஸ்ர் & ரொனால்டோ
அல்-நஸ்ருக்கான சவுதி புரோ லீக் அறிமுகத்தில் ரொனால்டோ கோல் அடிக்கத் தவறினார், ஆனால் ஞாயிறு அன்று கிங் சவுத் பல்கலைக்கழக மைதானத்தில் எட்டிஃபாக்கை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்தார்.
ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஆகியவற்றிற்காக ஐந்து முறை பலோன் டி'ஓர் வென்ற ரொனால்டோ, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் இருந்து வரும் வாய்ப்புகளை நிராகரித்த பிறகு, அல் நஸ்ர் கிளப்பில் ஜூன் 2025 வரை ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரொனால்டோ ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பாதிக்கலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன, இது அவரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக மாற்றும்.