”நீதி வழங்கப்பட்டுள்ளது”...அல்கொய்தா தலைவரை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா: ஜோ பைடன் உரை!

Joe Biden United States of America Afghanistan
By Thiru Aug 02, 2022 06:00 AM GMT
Report

 அல்கொய்தாவின் முக்கிய தலைவர் அல்-ஜவாஹிரி நேற்று அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் ”நீதி வழங்கப்பட்டுள்ளது” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பால் அதிகம் தேடப்படும் தீவிரவாதி மற்றும் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருமான 71 வயது அய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாட்டு மக்களுக்கு நேரலையில் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், வெள்ளை மாளிகையின் நீல அறைக்கு வெளியே உள்ள பால்கனியில் இருந்து அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை ஜோ பைடன் உறுதிப்படுத்தினார்.

அப்போது நாட்டு மக்களுக்கு உறையாற்றிய ஜோ பைடன் 9/11 அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை கொலை செய்ததன் மூலம் நீதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் 11 செப்டம்பர் 2001ல் நடந்த தாக்குதலில் இறந்த கிட்டத்தட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்பு, தீவிரவாத தலைவர் இனி இல்லை என ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

71 வயதான அல்கொய்தா தலைவர் காபூலில் அவரது வீட்டு பால்கனியில் நின்று கொண்டு இருந்த போது ட்ரோன் ஏவுகணைகள் மூலம் கொல்லப்பட்டார், இந்த தாக்குதலில் அவரை தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் பாதிப்படையவில்லை எனத் தெரிவித்தார்.

”நீதி வழங்கப்பட்டுள்ளது”...அல்கொய்தா தலைவரை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா: ஜோ பைடன் உரை! | Al Qaeda Ayman Al Zawahri Killed By Us Biden Says

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி கிட்டத்தட்ட 1 வருட இடைவேளைக்கு பிறகு இந்த தீவிரவாத ஒழிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இனி ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பு புகழிடமாக இருக்காது எனத் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அனைத்திடமிருந்தும் நாட்டு மக்களை பாதுகாப்பதில் எங்களின் உறுதியும் திறனையும் அமெரிக்கா தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.

”நீதி வழங்கப்பட்டுள்ளது”...அல்கொய்தா தலைவரை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா: ஜோ பைடன் உரை! | Al Qaeda Ayman Al Zawahri Killed By Us Biden Says

அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டவர்களை எவ்வளவு நேரம் எடுத்தாலும், நீங்கள் எங்கு மறைந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களைக் கண்டுபிடித்து வெளியேற்றும் என்பதை நாங்கள் இன்றிரவு மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: தினேஷ் கார்த்திக் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது...பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பரபரப்பு கருத்து!

இந்த நிலையில், காபூல் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள ட்ரோன் தாக்குதலுக்கு தாலிபான் நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச கொள்கைகளின் தெளிவான மீறல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. 

”நீதி வழங்கப்பட்டுள்ளது”...அல்கொய்தா தலைவரை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா: ஜோ பைடன் உரை! | Al Qaeda Ayman Al Zawahri Killed By Us Biden Says

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US