நைட்ரஜனை சுவாசிக்கச் செய்து மரண தண்டனை விதிக்கவுள்ள முதல் மாநிலம்
அமெரிக்காவில் முதல்முறையாக நைட்ரஜனை சுவாசிக்கச் செய்து மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.
தூய நைட்ரஜனை சுவாசிக்க வைப்பதன் மூலம் ஒரு கைதிக்கு மரண தண்டனையை வழங்கும் முதல் மாநிலமாக அலபாமா மாறக்கூடும். அமெரிக்காவில் இது மூன்று மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்ட மரண தண்டனை முறையாகும், ஆனால் இது ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.
அலபாமா அட்டர்னி ஜெனரல் ஸ்டீவ் மார்ஷல், 58 வயதான மரண தண்டனைக் கைதியான கென்னத் யூஜின் ஸ்மித்தின் மரணதண்டனைத் திகதியை நிர்ணயிக்குமாறு மாநில உச்ச நீதிமன்றத்திடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட மனுவில் கேட்டார். அந்த மனுத்தாக்களில், அலபாமா நைட்ரஜன் ஹைபோக்ஸியா (nitrogen hypoxia) முறையில் அவரைக் கொல்ல விரும்புவதாக தெரிவித்தது.
1988-ல் ஒரு சாமியாரின் மனைவியைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற இரண்டு கொலைகாரர்களில் ஸ்மித் ஒருவர். அவர் எலிசபெத் சென்னட் என்ற பெண்ணைக் கொன்றார்.
AP
நைட்ரஜன் ஹைபோக்ஸியா
நைட்ரஜன் ஹைபோக்ஸியா கைதிகளை நைட்ரஜனை மட்டுமே சுவாசிக்க கட்டாயப்படுத்துகிறது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் மூச்சுத் திணறலால் மரணம் ஏற்படுகிறது. மக்கள் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் உள்ளது. ஆனால் ஆக்ஸிஜனுடன் இணைந்து உள்ளிழுக்கும் போது அது பாதிப்பை ஏற்படுத்தாது.
ஊசி மூலம் குற்றவாளிகளுக்கு மரண தணடனை நிறைவேற்ற உதவும் மருந்துகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் 2018-ல் நைட்ரஜன் ஹைபோக்ஸியாவை அலபாமா அங்கீகரித்தது. ஆனால் மரண தண்டனையை நிறைவேற்ற இந்த முறை இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
அதேபோல், ஓக்லஹோமா மற்றும் மிசிசிப்பி நைட்ரஜன் ஹைபோக்ஸியாவை அங்கீகரித்துள்ளன, ஆனால் அதைப் பயன்படுத்தவில்லை.
Whitney Bryen
இந்த வகையான மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் இது வலியற்ற மரணம் என்று கூறுகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்கள் இது மனித பரிசோதனையின் ஒரு வடிவம் என்று வாதிடுகின்றனர். அலபாமா நைட்ரஜன் ஹைபோக்ஸியாவைப் பயன்படுத்தத் தயாராகிறது என்ற புதிய வெளிப்பாடுகள் அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது புதிய சட்டப் போராட்டங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |