உலகின் மூலையிலிருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்
ஆப்பிள் ஐபோன்களில் அலாரம் வேலை செய்யாததால் புகார்கள் குவிந்துள்ளன.
ஆப்பிள் ஐபோன்களில் அடிக்கடி பிரச்சனைகள் வருவதாக புகார்கள் எழுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
அந்த வகையில் தற்போது ஐபோன்களில் 'Alarm' வேலை செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதாவது, கடிகார செயலி வேலை செய்யவில்லை என்பதால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில் ஒலி எழுப்பவில்லை என்கிறார்கள் பயனர்கள்.
மேலும் அலாரம் வேலை செய்யாததால், ஐபோன்கள் பயன்படுத்தும் பல பயனர்கள் தாமதமாக எழுந்து, தாமதமாகவே அலுவலகம் செல்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் உலகத்தின் பல மூலையில் இருந்து புகார்கள் குவிந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த அளவுக்கு அலாரம் வேலை செய்யவில்லை என்று புகார்கள் குவிவது இதுதான் முதல் முறை என்று கூறும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், இதற்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும், IOS Update செய்ததும் அலாரம் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், அலாரம் இயங்காத பிரச்சனைக்கு ஆப்பிள் சரியான காரணத்தை கூறவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |