டொனால்ட் ட்ரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை: வாஷிங்டன் வந்தடைந்த அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் வந்தடைந்துள்ளார்.
அந்தோணி அல்பானீஸ்
அமெரிக்க ஜனாதிபதியுடன் வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) வாஷிங்டன் டிசிக்கு வந்துள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்பில் அவுஸ்திரேலிய பொருட்களின் மீதான வரிகள், கனிமங்கள் மீதான சாத்தியமான ஒப்பந்தம் மற்றும் AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விதி உள்ளிட்ட விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, 300 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஒப்பந்தமானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் 'America First' நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறா என்பதை தீர்மானிக்க அதனை மறுபரிசீலனை செய்து வருகிறது.
அவுஸ்திரேலிய-அமெரிக்க உறவு
உதவி வெளியுறவு அமைச்சர் Matt Thistlethwaite கூறும்போது, மறு ஆய்வைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு, நிர்வாகத்திற்குள் ஆதரவு இருக்கிறது என்றார்.
இதற்கிடையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு அல்பானீஸ் ஐந்து முறை ட்ரம்புடன் பேசினார்.
அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் முன்பு ஒரு அறிக்கையில்,
"வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்புடன் ஒரு நேர்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன். அவுஸ்திரேலிய-அமெரிக்க உறவை வலுப்படுத்த எங்கள் சந்திப்பு ஒரு முக்கியமான வாய்ப்பு" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |