பிரித்தானியாவில் தங்குவதற்கு போதைப்பொருள் வியாபாரிக்கு அனுமதி: நீதிபதி கூறிய காரணம்
அல்பேனிய போதைப்பொருள் வியாபாரி தவறை உணர்ந்ததால் பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் வியாபாரி
29 வயதான அர்லிண்ட் நபோலி என்ற அல்பேனிய போதைப்பொருள் வியாபாரி, கோகோயின் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் பிடிபட்டார். 
அவர் 10 கிராம் கோகோயின் மற்றும் 30 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ரொக்கம் மற்றும் அல்பேனியாவில் இரண்டு நபர்களுக்கு இரண்டு பணப் பரிமாற்ற விவரங்கள் இருந்தன.
பின்னர் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாபோலி போதைப்பொருள் கடத்தல் மற்றும் சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு 33 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மனித உரிமைகள் அடிப்படையில் நபோலியின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டபோது, அவர் குற்றம் 'ஒரு முறை மட்டுமே' என்று கூறினார்.
மேலும், சிறையில் இருந்தபோது அல்பேனியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவர் மறுவாழ்வுப் பணியில் தொடர முடியாது என்றார்.
பாடம் கற்றுக்கொண்டார்
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய அவர், பிடிப்பட்டபோது தான் போதைப்பொருள் வியாபாரம் செய்யவில்லை என்றும், ஆனால் ஒரு பயனராக இருந்ததாகவும், நிதி ஆதாயத்திற்காக ஒருவருக்கு ஆதரவாகப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறினார்.
அத்துடன் நாடு கடத்தப்பட்டால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும், அவர்களிடம் இருந்து 'பிரிந்து செல்வதை தாங்க முடியாது' என்றும் தெரிவித்தார்.
விசாரணையில், மேல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். பொதுமக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக கருதப்பட்ட ஒரு அல்பேனிய போதைப்பொருள் வியாபாரி 'பாடம் கற்றுக்கொண்டார்' என்று தெரிவித்தார்.
இதன்மூலம் வருத்தம் தெரிவித்த அவர் பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |