பிரித்தானியாவில் இரகசியமாக வசித்து வந்த கொலையாளி மீண்டும் கண்டுபிடிப்பு
10 ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றப்பட்ட கொலையாளி, மீண்டும் பிரித்தானியாவில் சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்
அல்பேனியாவைச் சேர்ந்த 54 வயது நபர் அஃப்ரிம் சினானி, கடந்த வாரம் பிரித்தானியாவின் பிரதான வீதியில் சுற்றித் திரிந்தபோது காணப்பட்டார்.

இந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்காக 1996ஆம் ஆண்டில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் ஆவார்.
ஆனால், அல்பேனியாவில் இருந்து தப்பில் 2000ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார்.
10 ஆண்டுகள் கழித்து சினானி எசெக்ஸில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரிய வர, அவர் 2010யில் அல்பேனியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு
இந்த நிலையில்தான் சினானி பிரித்தானியாவில் இருப்பது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சினானி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவே விரும்புகிறார் என்றும், பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றும் தெரிகிறது.
அவர் எப்போது பிரித்தானியாவிற்கு திரும்பினார் என்பது தெரியவில்லை, ஆனால் 2017யில் அவர் அல்பேனிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சகம், 'வெளிநாட்டு குற்றவாளிகளை கூடிய விரைவில் வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்று கூறியது.
முன்னதாக, சினானியின் குடும்பத்தினர் பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். 2010 வரை அந்நபரின் மனைவி மற்றும் குழந்தைகள் 120,000 பவுண்ட் மதிப்பிலான உதவித்தொகையைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |