கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்டை முடிவுக்கு கொண்டு வரும் கனேடிய மாகாணம்
ஆல்பர்ட்டா மாகாணம் தடுப்பூசி பாஸ்போர்ட்டை முடிவுக்குக் கொண்டு வரும் நாள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்க உள்ளது.
தனது அரசு, தடுப்பூசி பாஸ்போர்ட்டை முடிவுக்குக் கொண்டு வரும் நாள் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிக்க இருப்பதாக ஆல்பர்ட்டா பிரீமியர் Jason Kenney தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருத்துவமனைகள் மீதான அழுத்தம் தொடர்ந்து குறைந்துவரும் பட்சத்தில், இந்த மாத இறுதிவாக்கில், கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் படிப்படியாக விலக்கிக்கொள்வது குறித்தும் அடுத்த வாரத்தில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டாவின் உயர் தடுப்பூசி வீதமும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சீராவதும் இணைந்து, விரைவில் தடுப்பூசி பாஸ்போர்ட்டை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதை சாத்தியமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலவரப்படி, ஆல்பர்ட்டாவில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் முதலான அத்தியாவசியமற்ற சேவைகளைப் பயன்படுத்துவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.