பெண்ணுடன் தகராறு... அவரது ஆறு மாத குழந்தையை கொன்ற கனேடியர்
பெண்ணுடன் ஏற்பட்ட தகராற்றின்போது ஆறு மாதக் குழந்தையைக் கொன்ற கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stoney Nakoda First Nation என்ற பகுதியில் வாழும் Tyriq Lyman Kootenay (21) என்பவருக்கும் Brenna Hunter என்ற பெண்ணுக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையின்போது Tyriq, Brennaவின் குழந்தையான Tanayahவைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.
பொலிசார் Tyriqஐ கைது செய்துள்ளார்கள். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
குழந்தை ஒன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.