ரூ.93,900 கோடி நிறுவனம்: சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி சகோதர, சகோதரிகள்.! சொத்து மதிப்பு
பிளாக்செயின் தொழில்நுட்பம் உலகை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், இதனை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் பலத்த கவனத்தை ஈர்த்து வருகின்றன. அத்தகைய நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படும் "அல்கெமி" (Alchemy) நிறுவனத்தின் பின்னணியில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை இருக்கிறது.
நிக்கில் விஸ்வநாதன்(Nikil Viswanathan)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கில் விஸ்வநாதன், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெற்றிக்கரமான தொழில்முனைவோராக உள்ளார்.
இவர் "அல்கெமி" நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஆக இருக்கும் இவர், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
முன்னதாக, "டவுன் டு லஞ்ச்" (Down To Lunch) என்ற சமூக ஹேங்கவுட் ஐபோன் பயன்பாட்டை இணைந்து நிறுவி, அது ஆப் ஸ்டோரில் சமூக தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.
மேலும், "செக் இன் டூ மை ஃப்ளைட்" (Check In To My Flight) என்ற வலைத்தளத்தை உருவாக்கினார். இதன் மூலம் பயணிகள் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களில் தானாகவே செக் இன் செய்ய முடிந்தது.
2017 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் (Forbes) நிறுவனத்தால் "30 அண்டர் 30" (30 Under 30) விருது வழங்கப்பட்டு இவரது சாதனை பாராட்டப்பட்டது.
அல்கெமியின் வெற்றி
அல்கெமி, பிளாக்செயின் டெவலப்பர்களுக்கான உள்கட்டமைப்பு தளமாகும். இது பிளாக்செயின் அடிப்படையிலான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கருவிகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
200 நாடுகளில் இருந்து வாரத்திற்கு 4 மில்லியன் பயனர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, "பிளாக்செயினின் மைக்ரோசாப்ட்”(Microsoft of Blockchain) என்று அழைக்கப்படும் "ஆல்கெமி”(Alchemy) நிறுவனத்தை நிர்வகித்து வரும் நிக்கில் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் Rs 84,787 கோடியாக ($10.2 billion) மதிப்பிடப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக 35 வயதிலேயே, உயர்ந்த இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் Rs 14,960 கோடியாகும்.
தாரா விஸ்வநாதன்(Tara Viswanathan)
தாரா விஸ்வநாதன் ரூபா ஹெல்த் (Rupa Health) என்ற பெயரில் மிகப்பெரிய சுகாதார நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இவர், சுகாதார துறையில் தனது நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சியை செய்து வருகிறார்.
இவரது நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் Rs 9,900 கோடியாகும்.
சகோதர-சகோதரி உறவின் பலம்
ஒரு கூட்டுக் குடும்பத்தின் பலத்தை இந்த சகோதர-சகோதரி ஜோடி எடுத்துக்காட்டுகிறது. தனித்தனியாக தங்கள் துறைகளில் சாதித்தாலும், அவர்களின் பிணைப்பு அவர்களின் வெற்றிக்கு உறுதுணை இருப்பதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |