மது குடிக்க பணம் கேட்டு மனைவியை அடித்த கணவன்..காப்பாற்ற முயன்ற தந்தை அடித்துக்கொலை
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் தந்தையை மகன் இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுவுக்கு அடிமையான ஓட்டுநர்
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் ராய்புர்கர் (45). ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமித் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவி மற்றும் தந்தையிடம் மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்ததால் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார் அமித். இதனைப் பார்த்த அமித்தின் 75 வயதான தந்தை, தன் மருமகளை காப்பாற்ற மகனை தடுத்துள்ளார்.
தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கிய மகன்
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அமித், இரும்புக்கம்பி ஒன்றை எடுத்து தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரது தந்தை அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக என கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தந்தையை கொன்ற அமித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |