கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய மன்கட் அவுட்: ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து வீரர்
வெற்றி நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு ட்விஸ்ட் கொடுத்த தீப்தி சர்மா
கிரீஸுக்கு உள்ளே இருப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லையே தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த அலெக்ஸ் ஹால்ஸ்
இந்திய மகளிர் அணி வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்தது சர்ச்சையான நிலையில், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. இந்திய அணி நிர்ணயித்த 170 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டாக 47 ஓட்டங்கள் எடுத்திருந்த சார்லோட் டீன் வெளியேறினார். அவர் தீப்தி சர்மா பந்துவீச வந்தபோது கிரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். உடனே தீப்தி சர்மா மன்கட் அவுட் முறையில் அவரை ஆட்டமிழக்க செய்தார்.
Cry more! Sending some wipers! https://t.co/uDvPzFPp92
— Akash (@Akash_Deepak05) September 25, 2022
இதனால் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆனால், மன்கட் அவுட் முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐசிசி விதியின் கீழ் இது இருந்தாலும் இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.
எனினும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலெக்ஸ் ஹால்ஸ், 'பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடும் வரை, எதிர்முனையில் இருக்கும் வீரர் கிரீஸுக்கு உள்ளே இருப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லையே' என தீப்தி சர்மாவின் செயலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
It shouldn’t be difficult for the non striker to stay in their crease til the ball has left the hand…
— Alex Hales (@AlexHales1) September 24, 2022