12 பிரான்ஸ் அலுவலர்களை வெளியேற்றும் நாடு: என்ன பிரச்சினை?
12 பிரான்ஸ் அலுவலர்களை வெளியேற்றும் நாடு: என்ன பிரச்சினை?
அல்ஜீரியாவிலிருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் அலுவலர்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் முற்றியுள்ளது.
என்ன பிரச்சினை?
பல ஆண்டுகளாகவே அல்ஜீரியாவுக்கும் பிரான்சுக்குமிடையிலான தூதரக உறவுகளில் பிரச்சினை இருந்துவருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் உள்துறை அலுவலகர்கள் உட்பட 12 பேரை அல்ஜீரியாவிலிருந்து 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு அல்ஜீரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமையன்று, அல்ஜீரிய தூதரக அலுவலர் ஒருவர் உட்பட மூன்று அல்ஜீரியர்கள் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு, அல்ஜீரிய அரசை விமர்சிப்பவரான சமூக ஊடகப்பிரபலமான Amir Boukhors என்பவரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வைத்து இந்த மூன்று பேரும் கடத்த முயன்றதாக சந்தேகிகப்படுகிறது.
இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம், பிரெஞ்சு அல்ஜீரிய எழுத்தாளர் ஒருவரை அல்ஜீரியா கைது செய்தது.
இப்படியே தூதரக மட்டத்தில் மாற்றி மாற்றி கைது நடவடிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில்தான், பிரான்ஸ் உள்துறை அலுவலகர்கள் உட்பட 12 பேரை அல்ஜீரியாவிலிருந்து 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு அல்ஜீரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |