பிரான்சில் உணவு டெலிவரி செய்ய மறுத்த அல்ஜீரிய இளைருக்கு நேர்ந்த கதி! அரசு அதிரடி நடவடிக்கை
யூத எதிர்ப்பு காரணமாக அல்ஜீரிய டெலிவரி பாயை பிரான்ஸ் நாடு கடத்தியுள்ளது.
Deliveroo ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்த 19 வயதான அல்ஜீரிய டெலிவரி பாயே அவரது நாட்டிற்கே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
19 வயதான அல்ஜீரிய இளைஞர், கடந்த ஜனவரி மாதம் அல்சேஸ் பிராந்தியத்தில் உள்ள இரண்டு Kosher உணவகங்களின் ஆர்டர்களை எடுத்த மறுத்துள்ளார்.
‘நான் யூத வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யமாட்டேன் என்று கூறி பிரச்சினை செய்துள்ளார். பின்னர் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனவரி 14 அன்று அல்ஜீரிய டெலிவரி பாயை நாடு கடத்த முடிவுசெய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அசை்சர் Gerald Darmanin அறிவித்தார்.
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அல்ஜீரிய இளைஞர் தனது நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாக Gerald Darmanin ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
யூத வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய மறுத்த டெலிவரி பாய் இன்று பிரான்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் என Gerald Darmanin தெரிவித்துள்ளார்.