பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண்: தீர்ப்பு விவரம்
பிரான்சில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், பிரெஞ்சு சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண்
2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, லோலா (Lola Daviet, 12) என்னும் பிரெஞ்சு சிறுமி, பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

மாலை 3.00 மணியளவில், அவளது வீட்டின்முன், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அல்ஜீரியா நாட்டவரான டாபியா (Dahbia Benkired, 27) என்னும் இளம்பெண், லோலாவை சந்தித்துள்ளார். அதற்குப் பின் லோலாவைக் காணவில்லை.
மகளைக் காணாததால் பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, CCTV கமெராவில் லோலாவை டாபியா சந்திக்கும் காட்சிகளும், அதற்குப் பின் டாபியா தன்னைச் சுற்றி சூட்கேஸ்கள் மற்றும் பெரிய இரும்புப் பெட்டி ஒன்றுடன் இருக்கும் காட்சிகளும் கிடைத்தன.
டாபியா, லோலா வாழும் அதே குடியிருப்பில் தன் சகோதரியுடன் தங்கியிருந்த நிலையில், லோலாவின் தாய் அந்த குடியிருப்பில் வேலை செய்துவந்துள்ளார்.
டாபியா ஒரு மாணவியாக பிரான்சுக்கு வந்தவர், தன் விசா முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருந்ததையும் மீறி சட்டவிரோதமாக பிரான்சில் தங்கியுள்ளார்.
டாபியா, லோலாவின் தாயிடம் அந்த கட்டிடத்துக்கு தடையில்லாமல் தானாகச் செல்வதற்காக ஒரு பாஸ் வேண்டும் என கேட்க, லோலாவின் தாய் டாபியாவுக்கு பாஸ் கொடுக்க மறுக்க, அதனால் ஆத்திரமடைந்த டாபியா பழிக்குப் பழி வாங்க லோலாவை சித்திரவதை செய்து, பாலியல் ரீதியில் தாக்கி கொலை செய்துள்ளார்.

தீர்ப்பு விவரம்
டாபியாவுக்கு, ஜாமீனில் வர இயலாத வகையில், ஆயுள் முழுவதும் சிறையில் செலவிடும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், பிரான்சில் இதுவரை மொத்தம் நான்கு பேருக்குத்தான் இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருமே ஆண்கள். ஆக, ஆயுள் முழுவதும் சிறையில் செலவிடும் வகையில் தண்டிக்கப்படும் முதல் பெண் டாபியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |