திரைப்பட பாடல்கள் கேட்பீர்களா? பிரபல நடிகையின் கேள்விக்கு இந்திய பிரதமரின் பதில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், திரைப்பட பாடல்கள் கேட்பீர்களா என்று கேட்டார் ஒரு பிரபல நடிகை.
திரைப்பட பாடல்கள் கேட்பீர்களா?
சமீபத்தில், பிரபல நடிகரான ராஜ் கபூரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது, பிரபல நடிகையும், ராஜ் கபூரின் பேத்தியுமான ஆலியா பட், நீங்கள் திரைப்பட பாடல்கள் கேட்பீர்களா என பிரதமரிடம் கேட்டார்.
சமீபத்தில் நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ராணுவ வீரர் ஒருவரின் அருகில் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன்.
#WATCH | Delhi: Ahead of the 100th birth anniversary of legendary actor-filmmaker Raj Kapoor on December 14, members of the Kapoor family yesterday extended an invitation to Prime Minister Narendra Modi.
— ANI (@ANI) December 11, 2024
Ranbir Kapoor, Alia Bhatt, Kareena Kapoor Khan, Saif Ali Khan, Karisma… pic.twitter.com/tdS89Ecvnm
அதில், நான் நடித்த திரைப்படம் ஒன்றின் பாடல் ஒன்றை நீங்கள் பாடுவதைக் கவனித்தேன் என்று கூற, கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பியுள்ளார்கள்.
அந்த சம்பவம் தொடர்பாக உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று கூறிய ஆலியா, உங்களால் திரைப்பட பாடல்களைக் கேட்க முடிகிறதா என்று கேட்டார்.
ஆலியாவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஆம், என்னால் இசையை கேட்க முடிகிறது. ஏனென்றால், எனக்கு இசை பிடிக்கும்.
எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் பாடல்கள் கேட்பதுண்டு என்றார் மோடி.
ராஜ் கபூர் குடும்பத்தினரிடம் அவர் உரையாடும் சுவாரஸ்ய காட்சிகளை இங்கு காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |