ஆலியா பட் அணிந்திருந்த அந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? - கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்
ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், முதல் முறையாக தங்களின் குழந்தையான ராஹாவின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியிருந்தார்கள்.
அதன் போது ஆலியா பட் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆலியா பட் அணிந்திருந்த ஆடையின் விலை
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர் - நடிகையான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும், காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு நவம்பர் மாதம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் முகத்தை வெளியில் காட்டாமலே வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடத்தின் போது தனது மகளின் முகத்தை ஊடகத்திற்கு காட்டியுள்ளார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டு இருகின்றது.
அதன்போது ஆலியா பட் அணிந்திருந்த அந்த ஆடையின் கவனமும் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அந்த ஆடையானது கறுப்பு மற்றும் சிவப்பு நிற பூக்களால் வடிவமைக்கப்பட்டதாகும்.
அதன் விலை மாத்திரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,590 விலைக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |