எங்களுக்கு குழந்தை வரப்போகிறது! அலியா பட், ரன்பீர் கபூர் ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்தி நட்சத்திர தம்பதி ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் தங்களுக்கு குழந்தை வரப்போகிறது என பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல இந்தி திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அலியா பட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் எங்களுக்கு குழந்தை வரப்போகிறது என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அலியா பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அருகில் உள்ள டிவி திரையை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார். ஆனால் அந்த திரை ஹார்ட்டின் எமோஜி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
அவரது அருகில் ரன்பீர் கபூர் அமர்ந்திருக்கிறார்.
இந்த பதிவை கண்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் சிலரோ அலியா கர்ப்பமாக இல்லை, படத்தின் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.