ஜப்பானில் பிரித்தானிய பெண் ஆசிரியர் மர்ம மரணம்
ஜப்பானில் காணாமல் போன பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஆசிரியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, நாட்டிங்ஹாமை சேர்ந்தவர் ஆலிஸ் ஹோட்கின்சன் (Alice Hodgkinson). 28 வயதாகும் இவர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஷேன் ஆங்கிலப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர், Kanagawa பகுதியில் தங்கியிருந்தார்.
அவர், ஓரிரு நாட்களாக வேலைக்கு வரத் தவறிய நிலையில், ஜூலை 1-ஆம் திகதி அவரது மேலாளரால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. பின்பு, பொலிஸில் புகார் அளிக்கப்பட்டு கடந்த ஒரு வாரகாலமாக தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணத்தைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாக நம்பப்படவில்லை என்று நாட்டிங்ஹாம்ஷைர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலிஸின் குடும்பத்தினர், அவர் "ஒரு புத்திசாலி, சாகச, நம்பிக்கை, அக்கறை, மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இளம் பெண்" என்று கூறினர்.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தை ஆதரிப்பதாகவும், ஜப்பானில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறியது.
அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவிய இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.