வர்த்தகத்தில் வலம் வரும் கோடீஸ்வரரின் மகள்.., நிறுவனத்தின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளில்
பிரபல காலணி நிறுவனமான மெட்ரோ பிராண்டஸ் நிறுவனத்தின் தலைவர் ரபீக் மாலிக்கின் மகளான அலிஷா மாலிக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
பிரபல நிறுவனமான மெட்ரோ பிராண்ட்ஸின் தலைவரும், இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவருமானவர் ரபீக் மாலிக். இவருடைய சொத்து மதிப்பு ரூ.25,810 கோடி ஆகும். இவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர்.
அதில், ஒருவர் தான் அலிஷா மாலிக். இவர் மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு, இ காமர்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் தலைவராக இருந்து, தற்போது அதனை ரூ.34,653 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளார்.
இவர், யு.கே.வில் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் நிதியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், 2009 -ம் ஆண்டு தந்தை ரபீக் மாலிக்கின் வர்த்தகத்தில் இணைந்து, மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
வர்த்தகத்தில் வளர்ச்சி
குறிப்பாக அலிஷா மாலிக், மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருந்துள்ளார். இவருடைய யோசனைககள் மற்றும் பல உத்திகள் ஆகியவற்றை செயல்படுத்தி நிறுவனத்தின் ஒரு முக்கிய வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.
ஆன்லைன் வர்த்தகம், omnichannel மற்றும் புதிய கால சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை வடிவமைக்க புதிய உத்தியை பயன்படுத்தினார். அதோடு இவர் தலைமையின் கீழ் தான் மெட்ரோ, மோச்சி மற்றும் வாக்வே ஆகிய ஒன்லைன் வர்த்தக தளங்களை மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
முன்னதாக, கடந்த 1955 -ம் ஆண்டு அலிஷா மாலிக்கின் தாத்தா மும்பையில் சிறிய காலனி கடையாக மெட்ரோ பிராண்ட்ஸை தொடங்கினார். பின்பு, தாத்தா முதல் பேத்திகள் வரை கடினமாக உழைத்ததால் தான் இந்நிறுவனம் தற்போது பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |