தாத்தா வழியில் பேரன்.. ரூ.58,766 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை நடத்துபவர்: யார் இவர்?
பி.காம் படிப்பை முடித்தவுடனேயே நிறுவனத்துக்கு உறுப்பினராகி தற்போது ரூ.58,766 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்துபவரை பற்றி பார்க்கலாம்.
தனது கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் சிலர் மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆகின்றனர். இன்னும் சிலர், தனது குடும்பத்தில் உள்ளவர் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தால் அவர்களுக்கு பிறகு அதனை நிர்வகித்து வருவதன் மூலம் சிலர் பிரபலமடைகின்றனர். அப்படி பட்ட ஒருவர் தான் சந்தீப் சிங்.
சந்தீப் சிங், Alkem Laboratories பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்த Alkem Laboratories பார்மா நிறுவனத்தை நடத்தி வந்த சம்பிரதா சிங்கின் பேரன் தான் இந்த சந்தீப் சிங்.
பி.காம் முடித்து நிறுவனத்தின் உறுப்பினர்
பார்மாசூட்டிகல் தொழிலில் சந்தீப் சிங்குக்கு 18 ஆண்டுகால அனுபவம் இருப்பது மட்டுமல்லாமல், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் எடுத்து செய்கிறார். இவர், 2013 -ம் ஆண்டில் பி.காம் படிப்பு படித்து முடித்தவுடனையே நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் ஆனார். பின்னர், 2017 -ம் ஆண்டில் நிறுவனத்துக்கு இயக்குநரானார்.
அல்கெம் லேபாரேட்டரீஸ் நிறுவனம் 1935 -ம் ஆண்டில் சம்பிரதா சிங்கால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம், பைட்டோ கெமிக்கல்ஸ் துறையில் முன்னோடியாக 75 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்குகிறது.
நிறுவனத்தின் மதிப்புரூ.58,766 கோடி
மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் Alkem Laboratories பார்மா நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தீப் சிங் உலக அளவில் விற்பனை செய்து வருகிறார். மேலும், இவர் Blue Tribe Foods என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார்.
இந்தியா முழுவதும் 3 உற்பத்தித் தளங்கள் மற்றும் ஐரோப்பா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்ட ஆல்கெம் சர்வதேச லிமிடெட் நிறுவனம், 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ளது.
சந்தீப்பீன் வெற்றியை கௌரவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான 'வளர்ந்துவரும் பார்மா லீடர் விருது' இந்திய அரசால் வழங்கப்பட்டது. தற்போது, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.58,766 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |