இன்னும் சில நாட்களில்... அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் இன்னும் சில நாட்களில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள அமைச்சர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
அடுத்த வாரம் கேபினட் அமைச்சர்கள் கமிட்டி கூட்டம் ஒன்றில் சந்திக்க உள்ள நிலையில், குறிப்பாக, பிரித்தானியாவுக்கு வருவோர் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட locator forms என்னும் ஆவணங்கள் பயன்பாடு முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தடுப்பூசி பெறாத பயணிகளுக்கான கொரோனா பரிசோதனையும் விலக்கிக்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விதிகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட உள்ளதைத் தொடர்ந்து பெருந்தொற்றுக்குப் பிறகு, முதன்முறையாக பயணிகள் இனி எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் பயணிக்க இருக்கிறார்கள். அதுவும் ஈஸ்டர் பண்டிகை வர இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைய இருப்பது நிச்சயம்.
பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளது.