சுவிட்சர்லாந்தில் புதிதாக உணவகம் திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிஸ் நகரமொன்றில் புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட்ட நிலையில், உணவக உரிமையாளர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
உணவக உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் புதிதாக Casi Casa restaurant என்னும் உணவகம் ஒன்றைத் திறந்தது ஒரு குடும்பம்.
இந்நிலையில், வார இறுதி விடுமுறைக்குப் பின் உணவகத்துக்குத் திரும்பிய உணவக உரிமையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், உணவகத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த 30 மேசைகளும் 60 நாற்காலிகளும் மாயமாகியிருந்தன.
இத்தனைக்கும், அந்த உணவகம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. அந்த மேசை நாற்காலிகள் எல்லாம், சங்கிலிகளால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தன.
அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த துணிகர திருடர்களைத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |