மாறுங்கள், இல்லையென்றால்... இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை
இங்கிலாந்திலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும், இன்று முதல், ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட் வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட்
இன்று முதல் இங்கிலாந்திலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட் வழங்கவேண்டும்.
மக்கள் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கும், சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்கும் உதவியாக, மருத்துவமனைகளின் இணையதளங்கள் அல்லது ஆப் சேவைகள் (app services) குறைந்தபட்சம் காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலாவது செயல்பாட்டில் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாறுங்கள், இல்லையென்றால்...
இந்நிலையில், ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட் திட்டத்தை செயல்படுத்த அரசு உதவி செய்யும் என்று கூறியுள்ளார் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் ( Wes Streeting).
பலர் ஏற்கனவே காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியுள்ள வெஸ், உணவு ஆர்டர் செய்வதும், டெக்ஸி புக் செய்வதும் எளிதாக இருக்கும்போது, மருத்துவர்களிடம் அப்பாயின்ட்மென்ட் பெறுவதும் ஏன் எளிதாக இருக்கக்கூடாது என்கிறார்.
ஆக, மாறாதவர்கள் இனியாவது மாறுங்கள், இல்லையென்றால் NHS அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் அருங்காட்சியமாக மாறிவிடும் என்றும் எச்சரித்துள்ளார் வெஸ்.
அவர் கூறுவதை சாதாரண மிரட்டலாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஏற்கனவே 2027ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ’ஒன்லைன் மருத்துவமனை’ என்னும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு பதிலாக, NHS app மூலமாக மக்கள் மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்க, மருத்துவர்கள் வீடு தேடிவந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுதான் அந்த திட்டம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |