இனி பிரித்தானியாவில் எல்லா வீடுகளிலும் இப்படி ஒரு விடயம் இருக்கவேண்டும்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவில் புதிதாக கட்டப்படும் எல்லா வீடுகளிலும், ஒரு செங்கல்லாவது துவாரமுடையதாக இருக்கவேண்டும் என்று கோரி, இம்மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுவாரஸ்ய தகவல்
நாடாளுமன்றத்தில் ஏதேதோ முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படும். ஆனால், புதிதாக கட்டப்படும் எல்லா வீடுகளிலும், ஒரு செங்கல்லாவது துவாரமுடையதாக இருக்கவேண்டும் என்று கோரி, அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எதற்காக இப்படி ஒரு விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இருக்கிறார்கள் என்று பார்த்தால், அதன் பின்னே ஒரு முக்கிய காரணம் உள்ளது.
Photograph: Simon Stirrup/Alamy
என்ன காரணம்?
அதாவது சில அரிய பறவை இனங்கள், குறிப்பாக, The swift முதலான சில பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
அதற்கு அவை உண்ணும் பூச்சிகள் அழிந்துவருவது ஒரு காரணம் என்றாலும், மற்றொரு காரணம், அவை பொதுவாக வீடுகளின் சுவர்களில் உள்ள துவாரங்களில் வாழும் நிலையில், தற்போது கட்டப்படும் வீடுகள் சுத்தமாக துவாரங்களே இல்லாமல் பூசி மெழுகிவிடப்படுவதால், இந்த பறவைகளுக்கு வாழ இடம் இல்லை.
ஆகவேதான், 65 மில்லியன் ஆண்டுகளாக துவாரமுள்ள செங்கள் உள்ள இடங்களில் வாழ்ந்துவந்த இந்த அரியவகைப் பறவைகளை பாதுகாப்பதற்காக, அவற்றிற்கு வாழ வீடு ஏற்பாடு செய்துகொடுப்பதற்காகத்தான், கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாதம் 10ஆம் திகதி, புதிதாக கட்டப்படும் எல்லா வீடுகளிலும், ஒரு செங்கல்லாவது துவாரமுடையதாக இருக்கவேண்டும், அதாவது, swift brick என்னும் துவாரமுடைய செங்கற்கள் இருக்கவேண்டும் என்று கோரி, அது தொடர்பில் விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |