சுவிஸில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிகம் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு புதிதாக பாதிப்படைவோர்களில் மூன்றில் ஒருவர் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லந்தில் கொரோனாவுக்கு இதுவரை இதுபோன்று குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பாதிக்கப்பட்டதில்லை என்றே கூறப்படுகிறது. நவம்பர் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் மட்டும், புதிதாக பாதிப்படைவோர்களில் மூன்றில் ஒருவர் 19 வயதுக்குட்பட்டவர் என தெரியவந்துள்ளது.
பல மாநிலங்களில் பள்ளிகளில் மாஸ்க் கட்டாயமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூட மாஸ்க் அணிந்துகொள்வதில்லை. மீண்டும் மீண்டும் சோதனை செய்வது எல்லா இடங்களிலும் கட்டாயமில்லை -
மேலும் சோதனையை நடத்தும் சில பள்ளிகள் அதிக சுமை கொண்ட சோதனை ஆய்வகங்களால் தாமதப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
மேலும், பல இடங்களில், சோதனை முடிவுகளுக்காக மாணவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சாதாரணமாகவே மாணவர்கள் பள்ளிக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, தற்போதைய சூழலில் சுவிஸ் பள்ளி மாணவர்கள் 50,000 பேர்கள் நீண்ட நாள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.