பாலுறவு மூலம் பலம் கூடுகிறது... ரகசியத்தை உடைத்த ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற பிரபல வீராங்கனை!
பாலூறவு கொள்வதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு, அதீத சக்தி கிடைப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது என்று ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கம் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கணை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருக்கும் பிரபல ஊடகமான ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அந்நாட்டு வீராங்கனை அல்லா சிஷ்கினா அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன்.
நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்தாலோசித்தேன். அதன்படி அறிவியல் சமூகம் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டும் என்றால் நீங்கள் பாலுறவு கொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது பாலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர், பாலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். பாலுறவுக்கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.
முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு பாலுறவு நல்ல பலனை கொடுக்கும். பாலுறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
இதன் காரணமாக விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுப்படுத்தப்படும். தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் பற்றி கூறும் போது, ஒவ்வொரு நீச்சல் வீராங்கணைகளுக்கும் வித்தியாசமான உடலமைப்பு இருக்கும்.
பெரிய மார்பகங்கள் இருக்கும் வீராங்கனைகளால் தண்ணீரில் எளிதாக மிதக்க முடியும், போட்டிகளிலும் எளிதாக ஜெயிக்க முடியும். ஆனால் உண்மையில் பெரிய மார்பகங்களை வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதே சிரமம்.
இதனால் பல வீராங்கனைகள் மார்பக அறுவைச் சிகிச்சை செய்துக்கொள்கின்றனர். இது மிகவும் செலவுமிக்கது மற்றும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.
32 வயது மதிக்கத்தக்க அல்லா சிஷ்கினா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், இதற்கு முன்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும், 2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.