பிரித்தானியாவில் குழந்தையை கடத்த நடந்த முயற்சி: 50 வயது அதிரடி கைது!
பெண் ஒருவர் குழந்தையை கடந்த முயன்ற சம்பவத்தால் பிளாக்பூலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை கடத்தல் முயற்சி
பிளாக்பூல் நகரில் நேற்று காலை நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், குழந்தை கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட 51 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிளாக்பூல் சென்ட்ரல் டிரைவ் பகுதியில், பிரபலமான கோரல் ஐலேண்ட் கேளிக்கை கூடத்திற்கு அருகில் சனிக்கிழமை காலை சுமார் 11:55 மணியளவில் நடந்துள்ளது.
பொலிஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அந்த பெண்மணி தள்ளுவண்டியில் இருந்த ஒரு குழந்தையை நெருங்கியுள்ளார்.
உடனடியாக சுதாரித்த பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் துரிதமாக செயல்பட்டு கடத்தல் முயற்சியை தடுத்துள்ளனர். இந்த துரித நடவடிக்கையால் குழந்தை எந்தவித காயமும் இன்றி பத்திரமாக உள்ளது என்று பிளாக்பூல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த பெண் குழந்தை கடத்தல் மற்றும் பொலிஸ் மீது தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |