பிரதமர் போட்டியில் களமிறங்கும் போரிஸ் ஜான்சன்: ரிஷி சுனக்குக்கு எதிராகவா கூட்டணியா?
பலரும் எதிர்பார்க்காத விதமாக பிரதமர் போட்டியில் களமிறங்குகிறார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
அவர் ரிஷி சுனக்குக்கு போட்டியா அல்லது அவருடன் கூட்டணி அமைப்பாரா?
பிரதமர் இல்ல பார்ட்டிகள் முதல், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவுக்கான அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அடுத்த பிரதமருக்கான போட்டியில் பங்கேற்பவர்கள், 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என புதிய விதி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
போரிஸ் ஆதரவாளர்கள், நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக, அவர் முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக்குடன் கைகோர்க்கலாம் என்கிறார்கள். ஏனென்றால், முன்னர் ரிஷிக்கு 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. லிஸ் ட்ரஸ்ஸுக்கு அடுத்தபடியாக முன்னணி வகித்தவர் அவர்தான்.
ஆனால், ரிஷியின் நண்பர்களோ, அவர் சமாதானத்தை விரும்பினாலும்,திணறிக்கொண்டிருக்கும் பிரித்தானிய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பிரதமராவதை இலக்காகக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.
ரிஷியும் போரிஸ் ஜான்சனும் கைகோர்ப்பார்களா, ரிஷி பிரதமர் ஆவாரா, அல்லது கடந்த முறையைப் போலவே தோலின் நிறத்தைப் பார்த்து கடைசி நேரத்தில் ரிஷியை கைகழுவிவிடுவார்களா பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், என்பதையெல்லாம், பிரித்தானியர்களைப் போலவே நாமும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.