டி20 பிளாஸ்டில் 6 சிக்ஸர்களுடன் 74 ரன் விளாசிய வீரர்: 3 ஓட்டங்களில் த்ரில் வெற்றி
கென்ட் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் போட்டியில் எசெக்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அலிசன் விளாசல்
டி20 பிளாஸ்ட் தொடரின் 52வது போட்டியில் எசெக்ஸ், கென்ட் அணிகள் மோதின.

முதலில் ஆடிய எசெக்ஸ் அணியில் ஜோர்டன் காக்ஸ் 31 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியில் மிரட்டிய சார்லி அலிசன் (Charlie Allison) 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
முல்டர் 11 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாச எசெக்ஸ் அணி 187 ஓட்டங்கள் குவித்தது. மேட் மில்னஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய கென்ட் அணி விக்கெட்களை இழக்க, அணித்தலைவர் சாம் பில்லிங்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார்.
அதிரடி கூட்டணி
அணியின் ஸ்கோர் 119 ஆக உயர்ந்தபோது பில்லிங்ஸ் 62 (38) ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் கடைசி கட்டத்தில் ஜேக் லிண்டோட், ஃப்ரெட் கிளாஸன் கூட்டணி அதிரடி காட்ட கென்ட் அணி வெற்றியை நெருங்கியது.
ஆனால், கடைசி ஓவரை சார்லி பென்னெட் துல்லியமாக வீச கென்ட் அணி 184 ஓட்டங்களே எடுத்ததால், எசெக்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜமான் அக்தர் 3 விக்கெட்டுகளும், சார்லி பென்னெட் 2 விக்கெட்டுகளும், ஸ்னேடர், முல்டர் மற்றும் கிரிட்ச்லே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |