தமிழகத்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி- உயர் நீதிமன்றம் உத்தரவு
Madras High Court Allows By-elections in Two Tamil Nadu Constituencies- அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர்.
அதே நேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |