காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் அல்லு அர்ஜுன்
பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
அல்லு அர்ஜுன் ஆஜர்
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (OU JAC) எனக் கூறிக்கொள்ளும் மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
#WATCH | Telangana: Actor Allu Arjun reaches Chikkadpally police station in Hyderabad to appear before the police in connection with the Sandhya theatre incident. pic.twitter.com/EjTvyN9eTi
— ANI (@ANI) December 24, 2024
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி பொலிஸார் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, இன்று இரண்டாவது முறையாக நடிகர் அர்ஜுன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |