துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது: எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் - நடிகர் அல்லு அர்ஜூன்
நடிகர் அல்லு அர்ஜூன், கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கைது
திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்
இடைக்கால பிணை பெற்று வெளியே வந்த அவர் பேசும்போது, "கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கிற்கு செல்வது வழக்கம். இம்முறை துரதிர்ஷ்டவசமாக விபத்து நடந்துவிட்டது.
இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். என்னை நினைத்து கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |