வாயை மூடியதற்காக வெளியேற்றப்பட்ட வீரர்., உலகக் கோப்பையில் முதல்முறையாக நடந்த சுவாரசிய சம்பவம்
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பராகுவே அணியின் முக்கிய வீரர் மிகுவேல் அல்மிரோன் (), துருக்கி அணிக்கு எதிரான போட்டியில் வாயை கையால் மூடி பேசியதால் புதிய விதிமுறையின் கீழ் நேரடியாக சிவப்பு அட்டை பெற்றார்.
FIFA அறிமுகப்படுத்திய புதிய விதிமுறையின், மைதானத்தில் வாயை மூடி பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், கடந்த காலத்தில் சில வீரர்கள் வாயை மூடி பேசும்போது இனப்பாகுபாடு சார்ந்த வார்த்தைகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தச் சட்டத்தின் அடிப்படையில், அல்மிரோன் உலகக் கோப்பையில் முதல் முறையாக இவ்விதமாக வெளியேற்றப்பட்ட வீரராகிறார்.

அல்மிரோன் வெளியேறியதால் பராகுவே 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அவர்கள் துருக்கியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் தங்கள் வாய்ப்பை உயிர்ப்பித்தனர். இந்த வெற்றி துருக்கி அணியை போட்டியிலிருந்து வெளியேற்றியது.
அல்மிரோன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் அணியினரின் போராட்டத்திற்கு நன்றி. இந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை” என்று குறிப்பிட்டார். ஆனால் தனது வெளியேற்றம் குறித்து எதுவும் சொல்லவில்லை.
பராகுவே பயிற்சியாளர் குஸ்டாவோ அல்ஃபாரோ, “அல்மிரோன் மனம் உடைந்திருந்தார். ஆனால் இந்த சம்பவம் அணியின் போராட்ட மனப்பாங்கை அதிகரித்தது” என்று கூறினார்.
இந்த புதிய விதிமுறைகள், கால்பந்தின் இயல்பை பாதிக்கக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |