வறண்ட முடி பிரச்சனையா? பட்டு போன்ற மென்மையான கூந்தலுக்கு இந்த ஒரு எண்ணெய் போதும்
ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற பாதம் எண்ணெய் ஒன்று போதும். இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாதம் எண்ணெய்- 1 கப்
- கற்றாழை ஜெல்- 2 துண்டு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதாம் எண்ணெயை எடுத்து இதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த எண்ணெயைக் தடவி மசாஜ் செய்து 4 மணி நேரத்திற்கு அப்படியே விடவும்.
பின் தலைமுடியை மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி மென்மையாக மாறும்.
பாதாம் எண்ணெய் முடியை மென்மையாகவும், புதிய முடி வளரவும், சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் உதவுகிறது.
கற்றாழை ஜெல் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும், தலைமுடியை தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |