வெயிலில் முகம் கருப்பாகாமல் இருக்க உதவும் கற்றாழை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், வீவெயிலில் முகம் கருப்பாகாமல் இருக்க கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு 2 முறை என பயன்படுத்தி வர சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
2. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, கருமையாவதையும் தடுக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |