மருத்துவகுணங்கள் நிறைந்த கற்றாழை பாயசம்: எப்படி செய்வது?
அன்றாட நாட்களில் வீட்டில் சேமியா பாயசம், பருப்பு பாயசம், அரிசி பாயசம் போன்ற பல வகையான பாயசம் செய்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால், பெரும்பாலும் கற்றாழை பாயசம் செய்து யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். பொதுவாக கற்றாழை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
கால்சியம், வைட்டமின், மக்னீசியம் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கிய கற்றாழையை கொண்டு எப்படி பாயசம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 2 மடல்
- பாசிப்பருப்பு- 1 டம்ளர்
- துருவிய வெல்லம்- 2 டம்ளர்
- பால்- 2 டம்ளர்
- ஏலக்காய் தூள்- சிறிதளவு
- உப்பு – ஒரு சிட்டிகை அளவு
- முந்திரி- 1 ஸ்பூன்
- திராட்சை- 1 ஸ்பூன்
- பாதாம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கி அதில் உள்ள சதை பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த கற்றாழை சதையை 8- 9 முறை தண்ணீரில் நன்கு அலசி பின் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் பருப்பை 3 முறை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து பருப்பு மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வெந்த பருப்பில் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவை நன்றாக கொதித்த பிறகு அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து வெல்லம் முழுவதும் கரைந்ததும் நறுக்கி வைத்திருக்கும் கற்றாழையை சேர்க்க வேண்டும்.
பின் இதில் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதித்த பிறகு ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்கு கொதித்து பாயசம் போல் வந்ததும் இறுதியாக முந்திரி, பாதம், திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் கற்றாழை பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |