Aloo Paratha: சுவையான ஆலு பரோட்டா: 30 நிமிடத்தில் செய்யலாம்
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
ஆனால் இந்த வித்யாசமான உருளைக்கிழங்கை வைத்து செய்யப்படும் ஆலு பரோட்டா சாப்பிடவே அருமையாக இருக்கும்.
வெறும் தயிர் வைத்தே இந்த ஆலு பரோட்டா சாப்பிடலாம். சுவையான ஆலு பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- உருளைக்கிழங்கு- 3
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா சேர்த்து அதில் உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மா போல் பிணைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகி வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி பின் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து இதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கொத்தமல்லி தூவி கிளறி அடுப்பை அனைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து பிணைந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி தடிமனாக தேய்த்துக்கொள்ளவும்.
பின் அதற்குள் செய்த உருளைக்கிழங்கை சிறிய உருண்டையாக உருட்டி வைத்து அதனை அடைத்தவாறு உருட்டிக்கொள்ளவும்.
இறுதியாக இந்த உருண்டைகளை நன்கு சப்பாத்தி போல் தேய்த்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தவாவில் வேகவைத்து எடுத்தால் சுவையான ஆலு பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |