நாவூறும் சுவையில் ஆலு பராத்தா.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பன்னீர் பராத்தா மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் ஆலு பராத்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 2
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகாய் தூள்- ¼ ஸ்பூன்
- மல்லி தூள்- ½ ஸ்பூன்
- சீரக தூள்- ¼ ஸ்பூன்
- மிளகு- ¼ ஸ்பூன்
- சாட் மசாலா- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கரம் மசாலா- ¼ ஸ்பூன்
- கோதுமை மாவு- 2 கப்
- வெண்ணெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து வேகவைத்து அதன் தோலை உரித்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து கலந்துகொள்ளவும்.
தொடர்ந்து இதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மிளகு தூள், சாட் மசாலா, உப்பு, கரம் மசாலா சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பிணைந்து வைத்த மாவை உருண்டையாக பிடித்து அதற்குள் கலந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து சப்பாத்தி போல் திரட்டவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சூடானதும் அதில் திரட்டிய பராத்தாவை சேர்த்து அதன்மேல் வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான ஆலு பராத்தா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |