இணையமூடாக கல்வி... ரூ. 9100 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்: அவரது மொத்த சொத்து மதிப்பு
இணையமூடாக கல்வியை வழங்கிவரும் Physics Wallah என்ற நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.9100 கோடி என்றே கூறப்படுகிறது.
முயற்சிகள் தோல்வி
Physics Wallah நிறுவனத்தின் நிறுவனரான Alakh Pandey கல்லூரி பட்டப்படிப்பை பாதியில் கைவிட்டவர். IIT-ல் சேர வேண்டும் என்ற ஆசையில் அவர் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய பின்னர் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் BTech பட்டப்படிப்புக்கு சேர்ந்துள்ளார்.
ஆனால் வித்தியாசமான கல்வியாளராக வேண்டும் என முடிவு செய்த அலக் பாண்டே, 2016ல் YouTube channel ஒன்றின் ஊடாக கல்வியை வழங்க முடிவு செய்துள்ளார். 2017ல் இவரது யூடியூப் சேனல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50,000 கடந்தது.
2020ல் தனியாக செயலியை அறிமுகம் செய்தார். சின்னதாக தொடங்கப்பட்ட இந்த முயற்சியில் முதலில் வெறும் 5,000 ரூபாய் வரையிலேயே வருவாய் ஈட்டியுள்ளார். ஆனால் அதன் பின்னர் இவரது நிறுவனம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Physics Wallah நிறுவனம்
தற்போது Physics Wallah நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.9100 கோடி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, சுமார் 31 மில்லியன் பயனாளர்களுடன் Physics Wallah நிறுவனத்திற்கு தற்போது 61 யூடியூப் சேனல்கள் உள்ளன.
2021ல் சுமார் 9.4 கோடி வருவாய் ஈட்டிய Physics Wallah நிறுவனம், 2022ல் ரு.133.7 கோடியும் 2023ல் 108 கோடியும் வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு அவரது சொந்த ஊரான பிரயாக்ராஜின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார் பாண்டே அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.4400 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |