டி20 கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த வீராங்கனை!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலிஸ்ஸா ஹீலி விக்கெட் கீப்பிங்கில் சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளின் முதல் மகளிர் கிரிக்கெட் போட்டி இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிஸ்ஸா ஹீலி இரண்டு கேட்சுகள் பிடித்தார். இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலமாக 100 பேரை ஆட்டமிழக்க செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
PC: Twitter (@cricketcomau)
அலிஸ்ஸா ஹீலி 128 போட்டிகளில் 47 கேட்சுகள், 54 ஸ்டாம்பிங்குடன் 101 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். ஹீலிக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் எஸ்.ஜெ.டெய்லர் 90 போட்டிகளில் 74 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார்.
✅ 46 catches
— Women’s CricZone #B2022 (@WomensCricZone) July 29, 2022
✅ 54 stumpings
First wicket-keeper to complete 1⃣0⃣0⃣ dismissals in T20Is. #AUSvIND #CWG2022 #B2022 pic.twitter.com/vuoguJeBuJ