கேப்டனுடன் கடும் வாக்குவாதம்! 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை
வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
அல்சாரிக்கு தடை!
பார்படாஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் சாய் ஹோப்புக்கும், பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்-க்கும் பரபரப்பான சம்பவம் அரங்கேறியது.
இதனால் கேப்டன் சாய் ஹோப்புடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
Alzarri Joseph was a very angry man yesterday.
— Anirudh Kalra (@CricketKalra) November 7, 2024
Here is a Rip-Snorter. pic.twitter.com/vzKEhP51OI
என்ன நடந்தது?
தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆனால், போட்டியின் போது வீரர்களை நிறுத்துவது குறித்து கேப்டன் சாய் ஹோப்புக்கும், பந்து வீச்சாளர் அல்சாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்பிற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |