கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 200 நாட்அவுட்! ருத்ர தாண்டவமாடிய வீரர்
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அமன் ராவ், பெங்கால் அணிக்கு எதிரான விஜய் ஹஸாரே போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.
கக்லாவ்த் அரைசதம்
ராஜ்கோட்டில் ஹைதராபாத் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹஸாரே போட்டி நடந்து வருகிறது.
Pic: BCCI/X
இப்போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாடியது. அமன் ராவ் பெரலா மற்றும் கக்லாவ்த் ராகுல் சிங் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
அரைசதம் விளாசிய கக்லாவ்த் 54 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அமன் சிக்ஸர் மழை
பின்னர் வந்த திலக் வர்மா 34 ஓட்டங்களும், பிரக்னே ரெட்டி 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அமன் ராவ் சிக்ஸர் மழை பொழிந்தார்.
194 ஓட்டங்களில் இருந்த அவர், 50வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு இரட்டை சதத்தினை எட்டினார்.
அமன் ராவ் (Aman Rao) 154 பந்துகளில் 200 ஓட்டங்கள் விளாசினார். இதில் 13 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் குவித்தது. மொஹம்மது ஷமி 3 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது மற்றும் ரோஹித் தாஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Pic: PTI
Pic: BCCI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |