இது கனடாவுக்கு இந்தியாவுக்கும் கிடைத்த பதக்கம்! தங்கம் வென்ற கனேடிய வீரரின் 72 வயது தந்தை
காமன்வெல்த் போட்டியில் வென்ற தங்கம் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்தது என மல்யுத்த வீரர் அமர்வீர் தேசியின் தந்தை கூறியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மல்யுத்த வீரரான அமர்வீர் தேசி(26), காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய அமர்வீர், பாகிஸ்தான் வீரர் ஜமான் அன்வரை வீழ்த்தி 9-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன்பின்னர் சர்ரேயில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியபோது அமர்வீரின் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இவரது தந்தை பல்பிர் தேசி(72) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். மல்யுத்த வீரரான இவர் கடந்த 1979ஆம் ஆண்டு தேசிய கிரெகோ ரோமன் பட்டத்தை மங்களூரு நகரில் வென்றார்.
அதன் பின்னர் அவர் கனடாவில் குடியேறினார். பல்பிர் தேசியின் மகன்களான அமர்வீர் தேசி, பரம்வீர் ஆகிய இருவரும் மல்யுத்தப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
desiblitz
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் அமர்வீர் தங்கம் வென்றது குறித்து பல்பிர் கூறுகையில், 'எங்கள் அறையில் நான் வென்ற ஒரு பதக்கத்தை தவிர, மற்ற அனைத்தும் அமர்வீர் மற்றும் பரம்வீர் வென்றது ஆகும். மேலும், காமன்வெல்த் போட்டியில் அமர்வீர் வென்ற தங்கம், எங்கள் கோப்பை அமைச்சரவையின் பெருமையாக மாறும்.
இது கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பதக்கம், அங்குதான் நான் மல்யுத்தத்தைத் தொடங்கினேன். நான் கனடாவுக்கு இடம்பெயர்ந்தபோது வெள்ளிப்பதக்கத்தை கொண்டு வந்தேன். என் இரு மகன்களும் அதனை தக்க வைக்க போராடுவார்கள்' என தெரிவித்துள்ளார்.
desiblitz