அமாவாசை விரதம் இருக்கும் வழிமுறை!
ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை தினத்தன்று இறந்தவர்களை வேண்டி வணங்கி விரதம் இருப்பது தான் அமாவாசை விரதம் என்கின்றனர். அமாவாசை விரதம் இருக்க சில வழிமுறைகள் உள்ளன .
காலையில் எழுந்து அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களில் குளித்துவிட்டு ஆற்றாங்கரையில் அல்லது குளத்தங்கரையில் ஐயர்கள் மூலம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அதன்பின் ஏழை அல்லது முதியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்க வேண்டும்.
அமாவாசை விரதம் இருக்கும் முறை
அமாவாசை அன்று வீட்டில் உள்ள பெண்கள் குளித்து முடித்து விட்டு எல்லா காய்களும் இடம்பெறும் அளவில் சமையல் செய்து, பலகாரங்களும் செய்ய வேண்டும் .
பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமே அத்தனை இலைகள் இட்டு,துணிவைத்து கும்பிடுபவர்கள் துணி வைக்கலாம். அகல் வைத்து , தூய தீபங்கள் ஏற்றி,சமைத்த உணவு மற்றும் பலகாரங்களை இலையில் படைத்து நம் முன்னோர்களை நினைத்து வணங்கவேண்டும்.
பின் அனைத்து படையல்களிலுமிருந்து உணவு மற்றும் பலகாரங்களை கொஞ்சமாக எடுத்து காக்கைகளுக்கு அளிக்கவேண்டும்.
காக்கைகள் உண்ட பிறகு வீட்டிற்கும் முறைப்படி படைக்கப்பட்ட உணவினை குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து சாப்பிடவேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் எதுவும் சாப்பிடக் கூடாது மதியம் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை நல்லமுறையில் வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |