வாய்துர்நாற்றம் வராமல் தடுக்க, வயிற்றுவலியை போக்க இந்த பொருளை அப்படியே சாப்பிடலாம்!
ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும்.
அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம். Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் ஏலக்காய் சமஸ்கிருதத்தில் “ஏலா” என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் (ஏலரிசி) மருத்துவ பயன்கள் கொண்டவை.
உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகள் பலவற்றின் பூர்வீகமாக இந்திய நாடு இருக்கிறது. அதிலும் இன்று வரை யாரும் அறிந்திராத பல அற்புதமான மூலிகைகள் விளையும் பகுதியாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தோன்றிய ஒரு மூலிகை மற்றும் வாசனை பொருளாக “ஏலக்காய்” இருக்கிறது.
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய். ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.
சிறுநீர் எரிச்சல்
நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
வயிற்றுவலி:
அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
விரைப்புத்தன்மை
விரைப்புத் தன்மை கோளாறால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
நெஞ்சில் சளி
நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.
வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.