Moringa Tea: முருங்கை தேனீருக்கு இவ்ளோ பவரா? இனியும் தவிர்க்காதீங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் குறைந்த விலையிலேயே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் முருங்கை இலைகள், உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதுடன் ஏராளமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகவும் அறியப்படுகின்றது.
முருங்கை இலையானது சுமார் 2000 ஆண்டுகளாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமான பிரச்சனைகளை போக்குவது, இரத்த அழுத்தத்தை சீராக்குவது மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு வழங்குகின்றது.
இந்த முருங்கை இலையில், தேநீர் தயாரித்து அருந்துவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

முருங்கை தேநீர் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
முருங்கை இலைகள் - 1 கப் (அல்லது உலர்ந்த முருங்கை இலை பவுடர் - ½ டீஸ்பூன்)
தண்ணீர் - தேவையான அளவு
இஞ்சி - ¼ தே.கரண்டி
எலுமிச்சை சாறு - ½ தே.கரண்டி
தேன் - ½ தே.கரண்டி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் முருங்கை இலை அல்லது பவுடரை சேர்க்கவும்.
பின்னர் இதனுடன் இஞ்சி சேர்த்து மிதமான வெப்பநிலையில் கொதிக்க வைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்க்கவும். சிறந்த பலன்களை பெற காலை நேரத்தில் அருந்துவது நல்லது.

முருங்கையில் அதிகளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
முருங்கைக்கீரை சாறு இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதுடன் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
அதன் இலைகள் பாரம்பரியமாக உலர்த்தப்பட்டோ அல்லது வேகவைத்தோ தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முருங்கையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உடலின் உள் கழிவுகளை அகற்ற உதவுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் சரும ஆரோக்கியத்தையும் சீராக பராமரிக்க துணைப்புரிகின்றது. முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு இந்த டீ நன்மை பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி புத்துணர்வு கொடுக்கின்றது.