மாரடைப்பு வராது! புற்றுநோயை தடுக்கும்... இந்த ஒரு பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ‘ஹெர்ஸ்பெரிடின்’ என்ற வேதிப்பொருள், இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
எனவே தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம். ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் அதிக மெக்னீசியம், ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும்.
மேலும், சோடியம் அளவைக் குறைத்து அதிக ரத்த அழுத்தத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும். ஆரஞ்சில் உள்ள பிளேவனாய்டு, காயங்களையும், உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்யும்.
புதிதாய் காயங்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும். நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட். வெள்ளை அணுக்கள் உற்பத்தியையும் பெருக்கும்.
அல்சரினால் குடலில் உண்டாகும் பாதிப்பை ஆரஞ்சு குணப்படுத்துகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து ஆரஞ்சுப் பழச்சாறு பருகும்போது, சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
கடினமான உப்புக்களால் உருவாக்கப்படும் இந்தக் கற்களை ஆரஞ்சின் அமிலப் பண்பு கரைத்துவிடும்.
புற்றுநோய்க்குக் காரணமான பிரீ ரேடிகல்ஸை அழித்துவிடும். முக்கியமாக குடல், நுரையீரல், வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும்.